திமுக கூட்டணிக் கட்சிகளின் நலனுக்காக தமிழக மக்கள் பலிகடா ஆவதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இன்று (நவ.12) அவர் கூறியதாவது, “திமுக அரசின் பேராசை காரணமாக, பிற மாநிலங்களைச் சேர்ந்த வாகனங்களுக்கு, திமுக அரசு கூடுதல் சாலை வரி விதிக்கத் தொடங்கியது. அதனால் பாதிப்புக்குள்ளான பிற மாநில ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள், அந்தந்த மாநில அரசுகளை வலியுறுத்தி, தற்போது, பிற மாநிலங்களில் தமிழக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது” என விமர்சித்துள்ளார்.