திரண்டுள்ள மகளிரணியை பார்க்கும் போதே ஃபவர் புல்லாக இருக்கிறது. மகளிர் பவரால் திமுக மீண்டும் பவருக்கு வருவது உறுதியாகி உள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் பேசிய அவர், "கருப்பு - சிவப்பு கடல் போல லட்சக்கணக்கான பெண்கள், தாய்மார்கள் இதுவரை கூடியதாக வரலாறு இல்லை. எப்போதுமே திமுக தேர்தல் அறிக்கைதான் ஹீரோ. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பெறப் போகிறோம்" என கூறினார்.