திமுக அரசு மெட்ரோ விவகாரத்தை கைவிட வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று (நவ.19) கூறுகையில், "கோவை மெட்ரோவிற்கான விரிவான திட்ட அறிக்கையில், மெட்ரோ திட்டத்தால் பெரிய அளவில் நேரச் சேமிப்பு இல்லை என்று காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மெட்ரோ அறிக்கையில் பல தவறுகள் இருப்பதைத் தாண்டி, மெட்ரோவிற்கான தேவையை நியாயப்படுத்தக்கூட முன்வரவில்லை. இனியாவது மடைமாற்ற அரசியலை கையிலெடுப்பதை நிறுத்துங்கள் முதல்வரே!' என வலியுறுத்தியுள்ளார்