கோயம்புத்தூரில் இன்று (பிப்.22) நடைபெற்ற மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பில் திமுக இளைஞர் அணிச் செயலாளர், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “இன்றைக்கு சுமார் 80 ஆயிரம் இளைஞர் அணி நிர்வாகிகள் நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களின் எழுச்சியைப் பார்க்கும்பொழுது ஒன்று மட்டும் உறுதி, வெஸ்டிலும் திமுக தான் பெஸ்ட் என்பதை இந்தக்கூட்டம் நிச்சயம் நிரூபித்துக் காட்டும். அதற்கு உங்களின் எழுச்சியே உதாரணம்” என்றார்.