திமுகதான் தாமதம் செய்கிறது: கார்த்தி சிதம்பரம்

36பார்த்தது
திமுகதான் தாமதம் செய்கிறது: கார்த்தி சிதம்பரம்
கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்காமல் தாமதிப்பது திமுகதான் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றம்சாட்டினார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காங்கிரஸ் கட்சி ஏற்கனவே பேச்சுவார்த்தைக்கான குழுவை அமைத்துள்ளது. திமுகவும் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தினால் விமர்சனங்கள் எழாது. இல்லையெனில் சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியதுதான்" என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி