கோவையில் இன்று (பிப்.22) திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், "பாஜகவுக்கு எதிராக திமுக ஒரு மாபெரும் ஜனநாயக போரை நடத்தி வருகிறது. திமுக அரசு மக்களுக்கு வாரி வழங்கும் அரசாக திகழ்கிறது. ஆனால், பாஜக அரசு மக்களிடம் பிடுங்கும் ஆட்சியாக இருக்கிறது" என விமர்சித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றினாலே மக்கள் அச்சப்படும் சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.