முதல்வர் குறித்து ஆபாச பேச்சு: திமுக ஐ.டி. விங் நிர்வாகி கைது

1பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியான தங்கமணி (41) என்பவரை தவெக நிர்வாகியின் புகாரின் பேரில் போலீசார் இன்று (ஜூலை 13) கைது செய்தனர். மாற்றுத்திறனாளியான இவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தங்கமணிக்கு நீதிபதி உடனடியாக ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி