திமுக ஐடி விங் உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். திமுக ஐடி விங் அணியினரின் நிகழ்ச்சியில் பேசிய அவர், “நமது ஐடி விங் அணியினர், Defence மட்டுமே ஆடிட்டு இருக்கக்கூடாது; அப்பப்போ Attack modeக்கு மாறிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஐடி விங் உறுப்பினரும் தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையை பலப்படுத்தியுள்ளனர். திமுக முன்னெடுத்த பல முயற்சிகளை பலர் பாராட்டுகின்றனர். அந்த பாராட்டில் ஒரு பகுதி திமுக ஐடி விங்-க்கே சேரும்” என்றார்.