புதிய தமிழக அரசு 5 ஆண்டு காலம் நிலைக்காது என்றும், இது வெறும் சினிமா கவர்ச்சியால் அமைந்தது என்றும் முன்னாள் முதல்வர்
மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். புதிய பொம்மையைப் பார்த்ததும் வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தைக்கு இரண்டு நாட்களில் அது சலித்துவிடும் எனக் குறிப்பிட்ட அவர், பொம்மைக்காக ஓடிய குழந்தை மீண்டும் தாயிடம் திரும்புவது போல் மக்கள் விரைவில் திமுகவிடம் வருவார்கள் என்று கூறியுள்ளார்.