2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மறுதேர்வு முடிவை கைவிடுங்கள் என பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை அனுமதிக்க வேண்டும். மாநிலங்களே மருத்துவ இடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்த நிலையில், வினாத்தாள் கசிவு காரணமாக அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.