பனையூர் தவெக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "சட்டமன்ற மரபைப் பின்பற்றும் அரசு தவெக. 'வாய் திறங்க சி.எம்' என பேட்ஜ் குத்தி வந்த திமுகவினர், முதலமைச்சர்
விஜய் பேசத் தொடங்கியதும் ஓடிவிட்டனர். அவையில் திமுகவினருக்கு முதல்வர் பாடம் எடுத்துள்ளார். திமுகவின் சாம்ராஜ்யம் முடிந்துவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள இன்னும் 6 மாதங்கள் ஆகும்" எனப் பேசினார்.