தேர்தல்
முடிவுகள் குறித்து உடன்பிறப்புகள் எவ்வித தயக்கமுமின்றி http://udanpirapinkural.in இணையத்தளத்தில் கருத்துகளை பதிவு செய்யுமாறு
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுவரை 4.60 லட்சம் கருத்துகள் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த கருத்துகள் நேரடியாக தனக்கே வந்து சேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மே 31ம் தேதிக்குள் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்ட அவர், பொறுப்பாளர்கள் அனைவரும் இந்த செய்தியை சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிருமாறும் வலியுறுத்தியுள்ளார்.