முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், விஜய் தலைமையிலான தவெகவில் இணையவிருப்பதாக கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், திமுகவின் முக்கிய அமைச்சர் முத்துசாமி, செங்கோட்டையனை சற்றுமுன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது அவர் திமுகவில் இணைய வேண்டும் என்று செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.