திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை தருகிறார். கோவையில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் பாராட்டு விழாவில் பங்கேற்கும் அவர், நீலாம்பூரில் அமையவுள்ள பிரம்மாண்டமான ஒருங்கிணைந்த கோவை மாவட்ட
திமுக அலுவலகத்திற்கு காலை 11 மணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். 3 தளங்களுடன் கட்டப்படவுள்ள இந்த புதிய அலுவலகத்தில் திருமண மண்டபம், கூட்ட அரங்கம் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி மேற்கொண்டு வருகிறார்.