திமுக முப்பெரும் விழா.. புதிய தேதி அறிவிப்பு

3844பார்த்தது
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 15 அன்று நடைபெறவிருந்த 'திமுக முப்பெரும் விழா', அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 19 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள "கலைஞர் அரங்கில்" இந்நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி