மக்களை ஏமாற்றி வரும் தவெக அரசுக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில் பொதுமக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். மதுராந்தகம் தொகுதி
திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து இன்று (அக்.3) பிரச்சாரம் செய்த அவர்,
திமுக வழங்கிய வாக்குகள் மூலமே தவெக ஆட்சி அமைத்துள்ளது என்றும், போதைப்பொருள் விற்பனையை தடுப்பதிலோ அதை கட்டுப்படுத்துவதிலோ தவெக அரசு முற்றிலும் தோற்றுவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.