திமுக எதிர்கட்சியாக கூட வரக்கூடாது: அன்புமணி

5693பார்த்தது
திமுக எதிர்கட்சியாக கூட வரக்கூடாது: அன்புமணி
தமிழகம் முழுவதும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் இன்று (ஆகஸ்ட் 18) கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் மக்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வரும் தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக கூட வரக்கூடாது. தமிழ்நாட்டில் 350 சாதிகள் உள்ளன. அதில் எந்தெந்த சாதிகள் இன்னும் முன்னேறவில்லை, யார் எல்லாம் பின்தங்கிய நிலையில் உள்ளனர், கல்வியறிவு முழுமையாக பெற்றிருக்கிறார்களா என்பதை கண்டறிய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்" என தெரிவித்துள்ளார்.