"ஒன்றும் செய்யாத திமுக சமூகநீதி பற்றி பேசுகிறது" - நயினார்

51பார்த்தது
"ஒன்றும் செய்யாத திமுக சமூகநீதி பற்றி பேசுகிறது" - நயினார்
சமூகநீதி பேசுவதாக கூறும் திமுகவை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மதுரையில் இன்று (டிச.2) அவர் பேசியதாவது, "கல்வராயன் மலைப்பகுதியில் அதிகமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் அங்கு இல்லை. உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் முதலமைச்சர் ஸ்டாலின், இதுவரை ஒன்றும் செய்து தரவில்லை. ஆனால் திமுக அரசோ சமூகநீதி பற்றிப் பேசுகிறது” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி