பிப்., 26ஆம் தேதி சிபிஎம் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை

4233பார்த்தது
பிப்., 26ஆம் தேதி சிபிஎம் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை
சட்டமன்ற தேர்தலையொட்டி வரும் 26ஆம் தேதி திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. கடந்த முறை அரூர் (தனி), திண்டுக்கல், கீழ்வேளூர் (தனி), கந்தர்வகோட்டை (தனி), திருப்பரங்குன்றம், கோவில்பட்டி என 6 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிட்டது. இந்த முறை கூடுதல் தொகுதிகளை அக்கட்சி எதிர்பார்க்கும் நிலையில், தேமுதிக வருகையால் சீட் எண்ணிக்கையை குறைய விடாமல், 6 என்ற எண்ணிக்கையை தக்க வைக்கவும் முயற்சி எடுத்து வருகிறது.

தொடர்புடைய செய்தி