மருத்துவக் கல்விக்கான
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி திராவிடர் கழகம் சார்பில் இன்று (மே.16) மாநிலம் முழுவதும்
ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்த மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில்
திமுக நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். மேலும், திராவிடர் கழகம் நடத்தும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில், கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.