கோவையில் திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாட்டு இன்று (பிப்.2) நடைபெற இருக்கிறது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்புரை ஆற்ற, ஆ.ராசா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர். மேலும், அமைச்சர்கள் முத்துசாமி, சக்கரபாணி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள், மாவட்ட, மாநகர செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.