சென்னை: திமுக அரசு தொடக்கம் முதலே, தொழில் முதலீடுகளில் பொய் மூட்டைகளை மட்டுமே அவிழ்த்துவிட்டு வருவதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கையெழுத்தான தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களில், வெறும் 8.20% மட்டுமே செயலாக்கம் பெற்றுள்ளன. ஒட்டுமொத்த தொழில் முதலீடுகளும் வந்து விட்டதை போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் திமுக அரசின் முகமூடி கிழிந்து விட்டது” என சாடியுள்ளார்.