திமுக சார்பில் நடைபெறவிருந்த ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ 2-வது மாநாடு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திமுக மகளிரணி டெல்டா மண்டல மாநாடு, ஜனவரி 19க்கு பதிலாக ஜனவரி 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.