"திமுக கூட்டணி தவிர்த்து யாருக்கு வாக்களித்தாலும், வளர்ச்சி அரசியல் மாறி கலவர அரசியல்தான் நடக்கும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவிடந்தையில் நடக்கும் திமுக மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அவர், “தேர்தல் பணி என வந்துவிட்டால், திமுக தொண்டர்களை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என நான் மட்டும் சொல்லவில்லை. கழகத்தின் எதிரிகளே பல தருணங்களில் கூறியுள்ளார்கள்” என்றார்.