திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி
ஸ்டாலின் தலைமையில், வரும் மே 23-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இளைஞரணி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில்
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் பங்கேற்று, கட்சியை மேலும் வலுப்படுத்துவது மற்றும் எதிர்கட்சியாக எவ்வாறு திறம்பட பணியாற்றுவது என்பது குறித்து இளைஞரணி நிர்வாகிகளுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.