ஒரே வங்கிக் கணக்கில் மாத வருவாய் மற்றும் அன்றாட செலவுகள் அனைத்தையும் வைப்பது ஆபத்தானது என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வருமானம் வரும் வங்கிக் கணக்கின் விவரங்களை ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தாமல், மற்றொரு வங்கிக் கணக்கிற்குத் தேவையான தொகையை மட்டும் மாற்றி, அன்றாட செலவுகளுக்கு அதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. இரண்டாவது வங்கிக் கணக்கைத் தொடங்கி, முக்கியக் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.