பொதுவாக கடல் நீர் சூழ்ந்த நிலப்பகுதியைத் தான் தீவு என அழைப்பதுண்டு. ஆனால் தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம், காவிரி நதியால் உருவான ஒரு தீவாகும். அகண்ட காவிரி நதி முக்கொம்பு என்கிற இடத்தில் வடக்கே கொள்ளிடம், தெற்கே காவிரி என இரண்டு நதியாக பிரிகிறது. இந்த இடத்தில் 31 கி.மீ நீளம் மற்றும் 2.5 கி.மீ அகலத்துடன் ஒரு தீவு உருவாகி உள்ளது. அங்குதான் ஸ்ரீரங்கம் கோயிலும் அமைந்துள்ளது.