ஆண்களுக்கான உள்ளாடை தேர்வில் ‘V Shape’ வடிவங்கள் விதைப்பையில் அழுத்தத்தை ஏற்படுத்தி, காற்றோட்டத்தை குறைத்து அரிப்பை உண்டாக்கும் என்பதால், மருத்துவர்கள் அவற்றை பரிந்துரைப்பதில்லை. அதற்கு பதிலாக, காற்றோட்டமும் வசதியும் நிறைந்த காட்டன் துணியிலான ‘பாக்ஸர்’ வகை அல்லது ‘பாக்ஸர் ப்ரீஃப்ஸ்’ உள்ளாடைகளே ஆரோக்கியத்திற்கு மிக சிறந்தது என்று கூறுகின்றனர். மேலும், ஒவ்வாமை மற்றும் விந்தணு பாதிப்பை ஏற்படுத்தும் பாலியெஸ்டர், நைலான் கலந்த துணிகளை தவிர்த்து, 100% பருத்தி ஆடைகளை தேர்ந்தெடுப்பதே பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.