மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று (நவ., 05) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதன்படி, கோவை, புதுக்கோட்டை, தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, மதுரை, பெரம்பலூர், தஞ்சை, திருச்சி, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.