மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று (நவ., 19) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, தேனி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருப்பத்தூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.