தவெக கூட்டணியில்
காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் தவெகவின்
பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு தீவிரமாக இல்லாததால், வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம் போன்ற பிரச்சனைகளில் இடதுசாரிகள் தவெக அரசுக்கு எதிராக திரும்பியுள்ளன. கடந்த
திமுக ஆட்சியில் போராடும் இடதுசாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தற்போதைய தவெக அரசு கண்டுகொள்ளாததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.