சமாதானம் பேச வந்தவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மருத்துவர் கைது

25பார்த்தது
சமாதானம் பேச வந்தவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மருத்துவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் சொத்து பிரச்சனை குறித்து பேச வந்தவர் மீது, கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் அரேங்கேறியுள்ளது. பல் மருத்துவரான சிவ அமர்நாத் (26) வீட்டில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் ஸ்ரீதர் என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அமர்நாத் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். இதில் காயமடைந்த ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அமர்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.