தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒருவரை, மருத்துவர்
விஜய் பிரதாப் சிங் தாக்கும் CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விளக்கமளித்த மருத்துவ அலுவலர் போத்திராஜ், மருத்துவர் விளையாட்டாகவே தாக்கியதாகவும், இதில் எந்த பிரச்னையும் இல்லை என செவிலியர் குடும்பத்தினருடன் எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்துள்ளதாகவும் கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி:SunNews