திருச்சி அரசு மருத்துவமனை வார்டில் இரண்டு மருத்துவர்கள் நெருக்கமாக இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அங்கு நர்சிங் மாணவி ஒருவர் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி விலகும் முன்பே, இந்த அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது. இந்த வீடியோவைப் பகிரும் பலரும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.