உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஜியாபாத்தில், போதைக்கு அடிமையான சச்சின் என்ற நபர், மறுவாழ்வு மையத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டார். மருத்துவமனையில் ஸ்கேன் செய்தபோது, அவரது வயிற்றில் 2 பேனாக்கள், 19 பிரஷ்கள் மற்றும் 29 ஸ்பூன்கள் இருப்பது கண்டறியப்பட்டது. போதுமான உணவு கிடைக்கவில்லை என்ற கோபத்தில் இந்த பொருட்களை விழுங்கியதாக அவர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரை காப்பாற்றினர்.