உணவு சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது.. மருத்துவர்கள் எச்சரிக்கை

13பார்த்தது
உணவு சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது.. மருத்துவர்கள் எச்சரிக்கை
உணவு சாப்பிட்ட உடனே குளிப்பது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சாப்பிட்ட பிறகு ஜீரண செயல்பாட்டிற்காக வயிற்றுப் பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் தேவைப்படும். ஆனால் அப்போது குளித்தால், உடலின் வெப்பநிலை மாறி ரத்த ஓட்டம் தோல் பகுதிகளுக்கு செல்லத் தொடங்கும். இதனால் ஜீரண செயல்முறை மந்தமாகி, அஜீரணம், வயிற்றுப் பெருப்பு, சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் உணவு சாப்பிட்ட பிறகு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் கழித்து குளிப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி