சென்னை: “ஆளுநர் இடையூறு செய்வதை கண்டிக்க தவெக அஞ்சுகிறது” என விசிக முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “ஆளுநரை எதிர்க்கும் துணிவு விஜயிடம் உள்ளதா?. ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவு வேண்டும், அது உள்ளதா விஜயிடம்?” என கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் முதலமைச்சர் பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.