ஆந்திர மாநிலம் விஜயவாடா அரசு பொது மருத்துவமனையில் (GGH) ஊழியர்களின் அலட்சியத்தால் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அங்கு சிகிச்சை பெற்று உயிரிழந்த வந்த நோயாளி ஒருவரின் காலை, தெருநாய் ஒன்று கடித்துக் குதறி தின்றுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வெளியே வீசப்பட்ட மனித உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தால் கடும் சீற்றமடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் சத்யகுமார், மருத்துவமனைகளில் உள்ள தெருநாய்கள் விவகாரத்தைத் தீவிரமாகக் கையில் எடுத்துக்கொண்டு, இதற்குப் பொறுப்பானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க DME-க்கு உத்தரவிட்டுள்ளார்.