‘வதந்திகளை நம்ப வேண்டாம்’ - TNPSC விளக்கம்

4249பார்த்தது
குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்கள் அதிகரிப்பு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என TNPSC தெரிவித்துள்ளது. மேலும், “2024ல் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய 2 நிதி ஆண்டுகளுக்கான 8,932 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு நிதியாண்டிற்கு 4466 பணியிடங்கள். எனவே 2024ம் ஆண்டு சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு கூடுதலாக 1086 (4466-3380) பணியிடங்கள் என மொத்தம் 2172 (1086×2) பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படவுள்ளன” என விளக்கம் அளித்துள்ளது.

நன்றி: Tamil Janam