நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத லஞ்ச ஒழிப்புத்துறை, வாட்ஸ்அப் எண்களில் புகார் வந்தால் மட்டும் நடவடிக்கை எடுத்துவிடுவீர்களா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி ராஜா ராம் மீதான நீதிமன்ற அவமதிப்பு விசாரணை வழக்கில், விசாரணையை தாமதப்படுத்தி குற்றவாளிகள் தப்பவே வழிவகுக்கிறீர்கள் என நீதிமன்றம் சாடியுள்ளது. மேலும், லஞ்சத்தை ஒழிப்பதாக வாட்ஸ்அப் எண் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.