தவெக தலைவர் விஜய்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என திமுகவினர் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக கட்சி தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருகிறது. கரூர் சம்பவத்திற்கு திமுக தான் காரணம் என குற்றம்சாட்டி வருகிறது. சமீபத்தில் நடந்த தவெக பொதுக்குழு கூட்டத்திலும், தவெக நிர்வாகிகள், திமுகவை சரமாரியாக தாக்கிப் பேசினர். இந்நிலையில், இனிமேல் விஜய் வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என திமுகவினர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.