கூட்டணி விசயத்தில், தனிநபர் யார்மீதும், எந்த கட்சியின்மீதும் காழ்ப்புணர்வு இல்லை என திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், "குறிப்பான ஒரு சாதியினருக்கோ அல்லது மதத்தினருக்கோ எதிராக விசிக சிந்தித்ததுமில்லை, செயல்பட்டதுமில்லை. வன்னியர் சமூக மக்களுக்கு எதிராக நாம் முடிவெடுத்ததைப் போன்ற தோற்றத்தை உருவாக்கிட சிலர் முயற்சி. திரிபுவாதங்களுக்கு அவதூறுகளுக்கு இடம்தரும் வகையில் விசிகவினரின் கருத்துகள் அமைந்துவிடக் கூடாது" என கூறியுள்ளார்.