சுயமரியாதை இழந்து கூட்டணி வேண்டாம்.. காங்கிரசுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு

60பார்த்தது
சுயமரியாதை இழந்து கூட்டணி வேண்டாம்.. காங்கிரசுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், சென்னையில் இன்று (பிப்.17) காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பங்கேற்ற நிகழ்ச்சியின் அருகே "கூட்டணி வேண்டாம்" என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. 'காங்கிரஸ் உரிமை மீட்பு குழு' பெயரில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் உடனடியாக கிழிக்கப்பட்டாலும், இது கட்சியினரிடையே உள்ள அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி