அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வது என்பது ஒரு மரபுசார்ந்த நடைமுறை என்பதால், அமைச்சர் கீர்த்தனாவின் செயல்பாட்டை யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூலை 8) பேட்டியளித்த அவர், "அமைச்சர் கீர்த்தனா ஒரு சகோதரி ஸ்தானத்தில் இருந்துதான் பேசினார். அரசு பள்ளிகளின் தரம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டது" என அவர் கூறியுள்ளார்.