அறிமுகமில்லாத (Unknown) எண்ணில் இருந்து வரும் அழைப்பை அட்டென்ட் செய்தவுடன் 'ஹலோ' என்று சொல்ல வேண்டாம் என சைபர் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எதிரில் இருக்கும் ஸ்கேமர்கள் அந்த 'ஹலோ' என்ற வார்த்தையை ரெக்கார்ட் செய்து, AI மூலம் உங்கள் குரலை குளோனிங் செய்து, நீங்கள் பேசுவது போல பேசி, உங்களுக்கு தெரிந்தவர்களிடமிருந்து பணம் பறிக்கலாம் என்பதால், அழைப்பவர் பேசிய பின்னரே நீங்கள் பேச தொடங்குங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.