இயக்குநரும், நடிகருமான அமீர், தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், “நடிகர் நலத்திட்ட உதவிகள் செஞ்சா வாங்கிக்கங்க... அதுக்காக அவர் கிட்ட நாட்டை குடுக்கணும்னு நினைக்காதீங்க” என பதிவிட்டுள்ளார். தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது. தவெக தலைவர் விஜய்யின் கரூர் சம்பவத்தை தொடர்ந்து பலரும் அப்செட்டில் இருக்கு நிலையில், அமீரும் இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்த பதிவை வெளியிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.