காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என தவெக விஜயிடம் கூறியதாக நாதக சீமான் தெரிவித்துள்ளார். இன்று (பிப்.7) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விஜயுடன் பேசும்போது கூட்டணிக்கு காங்கிரஸை சேர்த்துக்கொள்ளலாமா? என கேட்டார். அவர்களை வைத்துக்கொண்டு எந்த அரசியலை பேச முடியும் என நான் கேள்வியெழுப்பினேன். கச்சத்தீவு விவகாரம். GST, நீட் என அனைத்தையும் கொண்டுவந்ததே அவர்கள் தான் என்றேன்” என தெரிவ்த்துள்ளார்.