சென்னையில் 18 ஆண்டுகளுக்குப்பின் டபுள் டெக்கர் பேருந்துகள் சேவை இன்று (ஜன., 12) தொடங்குகிறது. அகில உலக தமிழர் தினத்தையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக தாம்பரம் - பிராட்வே வழித்தடத்திலும், கோயம்பேடு அல்லது அடையாறு முதல் மாமல்லபுரம் வரையிலும் இந்த டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.