18 ஆண்டுகளுக்கு பிறகு.. டபுள் டக்கர் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்

5032பார்த்தது
18 ஆண்டுகளுக்கு பிறகு.. டபுள் டக்கர் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்
சென்னையில் 1970-களில் மிகவும் பிரபலமாக இருந்து, பராமரிப்பு செலவு காரணமாக 2008-ல் நிறுத்தப்பட்ட டபுள் டக்கர் பேருந்து சேவை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அயலக தமிழர்களின் நிதி பங்களிப்பு மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உருவான இந்த மின்சார டபுள் டக்கர் பேருந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.12) கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிவப்பு நிறத்தால் ஆன இந்த பேருந்தில் தஞ்சை பெரிய கோயில், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழகத்தின் வீரத்தையும், கலைகளையும் பறைசாற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி