யூடியூப் மியூசிக் இனி பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே முழுமையான பாடல் வரிகளை வழங்கும் புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளது. ஸ்பாட்டிஃபை போன்றே தனது வணிகத்தை வலுப்படுத்த இந்த முயற்சியை எடுத்துள்ள நிலையில், இலவச பயனர்களுக்கு இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், 27 மொழிகளில் ஏஐ டப்பிங் வசதியை அனைத்து வீடியோக்களுக்கும் விரிவுபடுத்தி தனது தொழில்நுட்ப சேவையை யூடியூப் மேம்படுத்தியுள்ளது.